3-ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது

இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மொத்தம் 17 பந்துகளே வீசப்பட்ட நிலையில், ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
 முன்னதாக, மழை காரணமாக 2-ஆம் நாள் ஆட்டமும் விரைவாக முடித்துக்கொள்ளப்பட்டபோது நியூஸிலாந்து 92.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது.
 இந்நிலையில், 3-ஆம் நாள் ஆட்டத்தை ஹென்றி நிகோலஸ் 49, வாட்லிங் 17 ரன்களுடன் தொடங்கினர். இதில் நிகோலஸ் 149 பந்துகளில் 3 பவுண்டரிகள் உள்பட அரைசதம் எட்டினார்.
 சிறிது நேரத்தில் மழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டு தேநீர் இடைவேளை விடப்பட்டது. அதன் பிறகும் மழை தொடர்ந்ததால் 3-ஆம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. நியூஸிலாந்து 95 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. நிகோலஸ் 52, வாட்லிங் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
 முன்னதாக, இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடி வரும் நியூஸிலாந்து தற்போதைய நிலையில் இங்கிலாந்தை விட 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com