அயர்லாந்தின் டெஸ்ட் பயணம் தொடங்கியது: பாகிஸ்தான் பேட்டிங்!

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டி பலத்த எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளது...
அயர்லாந்தின் டெஸ்ட் பயணம் தொடங்கியது: பாகிஸ்தான் பேட்டிங்!

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் அயர்லாந்து நாட்டின் முதல் டெஸ்ட் போட்டி இரண்டாம் நாளான இன்று தொடங்கியுள்ளது.

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை ஐசிசி வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் வரும் ஜூன் மாதம் தனது சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. அதே போல் அயர்லாந்து தனது முதல் டெஸ்டை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.

வெள்ளிக்கிழமை டப்ளினில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. ஆனால் துவக்க நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. ஒரு பந்து கூட வீசாத நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுற்றது. இந்நிலையில் இன்று டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற அயர்லாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டி பலத்த எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக், ஃபஹீம் அஷ்ரம் ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமாகியுள்ளார்கள். 

டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமான நாடுகள்

1877: ஆஸ்திரேலியா & இங்கிலாந்து
1889: தென் ஆப்பிரிக்கா 
1928: மேற்கிந்தியத் தீவுகள் 
1930: நியூஸிலாந்து 
1932: இந்தியா 
1952: பாகிஸ்தான் 
1982: இலங்கை 
1992: ஜிம்பாப்வே 
2000: வங்கதேசம் 
2018: அயர்லாந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com