சென்னை அபார வெற்றி

பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சென்னை அபார வெற்றி

பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் 56-வது ஆட்டம் புணேவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற சென்னை பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் தரப்பில் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 
கெயில் ரன் ஏதும் எடுக்காமலும், ஆரோன் பின்ச் 4 , லோகேஷ் ராகுல் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் துவக்கமே பஞ்சாப் அணிக்கு சரிவாக அமைந்தது. நிதானமாக ஆடிய திவாரி 35 ரன்களுக்கும், மில்லர் 24 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். 
அவர்களை அடுத்து அணியின் ஸ்கோரை கருண் நாயர்-அக்ஸர் பட்டேல் இணை உயர்த்தியது. பட்டேல் 14 ரன்களிலும், கேப்டன் அஸ்வின், ஆண்ட்ரு டை ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்கு பின் கருண் நாயர் 54, ராஜ்புத் 4 ரன்களுக்கும் வீழ்ந்தனர். 
19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து பஞ்சாப் 153 ரன்களை எடுத்தது. சென்னை தரப்பில் லுங்கி கிடி 4 விக்கெட்டையும், தாகுர், பிராவோ தலா 2 விக்கெட்டையும், ஜடேஜா, சஹார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி சார்பில் அம்பட்டி ராயுடு, டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 1 ரன் எடுத்த நிலையில் ராயுடுவும், 14 ரன்களுக்கு டுபிளெசிஸýம், ரன் ஏதும் எடுக்காமல் சாம் பில்லிங்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா-ஹர்பஜன் சிங் ஆகியோர் அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்திய நிலையில் 19 ரன்களில் ஹர்பஜன் ஆட்டமிழந்து வெளியேறினார். 
சஹார் 39 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரெய்னா 61 ரன்களுடனும், கேப்டன் தோனி 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
19.1 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து சென்னை வென்றது. பஞ்சாப் தரப்பில் அஸ்வின், ராஜ்புத் தலா 2 விக்கெட்டையும், மொகித் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இத்தோல்வியால் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com