புணே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தோனி கொடுத்த 'இன்ப அதிர்ச்சி' 

புணேவில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி லீக் ஆட்டத்திற்குப் பிறகு, ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு விஷேச பரிசளித்து தோனி 'இன்ப அதிர்ச்சி' அளித்துள்ளார்.  
புணே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தோனி கொடுத்த 'இன்ப அதிர்ச்சி' 

புணே: புணேவில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி லீக் ஆட்டத்திற்குப் பிறகு, ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு விஷேச பரிசளித்து தோனி 'இன்ப அதிர்ச்சி' அளித்துள்ளார்.  

ஐபிஎல்லில் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் போட்டிகள் அனைத்தும், காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடந்த கடுமையான போராட்டம் காரணமாக புணே நகருக்கு மாற்றப்பட்டது. அதனால் அடுத்து புணேவில் இந்தமுறை விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இறுதியாக ஞாயிறன்று பஞ்சாப் கிங்ஸ்லெவன் அணிக்கு எதிரான கடைசி லீக் சுற்றுப்போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

புனே மைதானத்தில் பெற்ற தொடர் வெற்றிகளை அடுத்து ஆடுகளத்தை நன்கு பராமரித்த ஊழியர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்று தோனி விரும்பினார்.

அதையடுத்து ஞாயிறன்று போட்டி தொடங்கு முன் ஆடுகளம் பராமரிப்பில் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சிஎஸ்கே அணி சார்பில் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தைப் பரிசளித்தார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்தப் படத்தையும் பரிசாக அளித்தார்.

இது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் புனே ஆடுகளத்தைச் சிறப்பாக பராமரித்து வரும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான சிறிய வெகுமதிதான் இது. இந்த பணம் வீரர்கள் அனைவரின் தரப்பில் இருந்தும், அணி நிர்வாகம் சார்பிலும் இருந்து தரப்பட்டது என்று கூறப்பட்டது.

முன்னதாக கடந்த வாரத்தில் புனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் தோனி தனது மகள் ஜிவாவை தூக்கி வைத்து கொஞ்சுவதுபோல் இருக்கும் வரையப்பட்ட ஓவியத்தை அவருக்கு பரிசாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com