ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று: ஹைதராபாத்-சென்னை இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் 2018 பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று: ஹைதராபாத்-சென்னை இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் 2018 பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 1 மாதத்துக்கு மேலாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப், தில்லி உள்ளிட்ட 8 அணிகள் லீக் சுற்றுகளில் 56 ஆட்டங்களில் பங்கேற்றன. 

4 அணிகள் தகுதி

புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் முதலிடத்தையும், சென்னை இரண்டாம் இடத்தையும், கொல்கத்தா மூன்றாம் இடத்தையும், ராஜஸ்தான் நான்காம் இடத்தையும் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

முதல் தகுதிப் போட்டி

மிகவும் எதிர்பார்கக்ப்பட்ட நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு அணிகள் தில்லியிடம் தோல்வியடைந்து வெளியேறின. ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த கட்டமான பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை மும்பையில் நடக்கும் முதல் தகுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஹைதராபாத்-சென்னை மோதுகின்றன.

ஏற்கெனவே லீக் சுற்றில் இரு முறையும் சென்னை அணி ஹைதராபாத்தை வென்றுள்ளது சாதகமான அம்சமாகும். மும்பை ஆடுகளம் (பிட்ச்) பவுன்ஸ் ஆகும் தன்மை கொண்டது.

கடந்த 13-இல் புணேயில் நடந்த ஆட்டத்தில் தான் ஹைதராபாத் அணியை தோற்கடித்து அதன் 6 தொடர் வெற்றிகளுக்கு சென்னை முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சென்னை அணி தனது கடைசிப் போட்டியில் பஞ்சாபை வென்ற உற்சாகத்தோடு களமிறங்குகிறது.

தூணாக திகழும் வில்லியம்ஸன்

ஹைதராபாத் அணி சிறப்பாக ஆடி வரும் தனது கேப்டன் கேன் வில்லியம்ஸனையே முற்றிலும் நம்பி உள்ளது. அவருக்கு அடுத்து ஷிகர் தவன் மட்டுமே குறிப்பிடும்படி ஆடி வருகிறார். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், சித்தார்த் கெüல், சந்தீப் சர்மா ஆகியோரை நம்பி உள்ளது.
சென்னையின் அதிரடி பேட்டிங்கை சமாளிக்க ஏதுவாக பந்துவீச்சை ஹைதராபாத் பலப்படுத்த வேண்டியுள்ளது.

வலுவான பேட்டிங்

அதே நேரத்தில் சென்னை அணி பேட்டிங்கில் மிகவும் வலுவாக உள்ளது. அம்பட்டி ராயுடு, வாட்சன், தோனி, ரெய்னா, ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர்.  பந்துவீச்சிலும் லுங்கி கிடி, தாகுர், சஹார், பிராவோ ஆகியோர்  சிறப்பாக செயல்ப்படடு வருகின்றனர். 

இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டம்

வழக்கமாக லீக் சுற்று ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கப்பட்டது. ஆனால் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் ஒருமணி நேரம் முன்னதாக அதாவது இரவு 7 மணிக்கு தொடங்கும். மேலும் சென்னை-ஹைதராபாத் ஆட்டத்துக்கு முன்பு மகளிர் டி 20 காட்சிப் போட்டியும் நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com