பெரு நாட்டு அணியில் பாவ்லோ கியுரோ இடம் பெற பிரார்த்தனை

போதை மருந்து பயன்படுத்திய புகார் எதிரொலியாக தடை விதிக்கப்பட்டுள்ள பெரு நாட்டு கால்பந்து அணி கேப்டன் பாவ்லோ கியுரோ உலகக் கோப்பை அணியில் இடம் பெற அந்நாட்டு ரசிகர்கள் திங்கள்கிழமை பிரார்த்தனை

போதை மருந்து பயன்படுத்திய புகார் எதிரொலியாக தடை விதிக்கப்பட்டுள்ள பெரு நாட்டு கால்பந்து அணி கேப்டன் பாவ்லோ கியுரோ உலகக் கோப்பை அணியில் இடம் பெற அந்நாட்டு ரசிகர்கள் திங்கள்கிழமை பிரார்த்தனை செய்தனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2018 வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூல 15-ஆம் தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. இதில் 32 நாடுகள் போட்டியிடுகின்றன.
தென் அமெரிக்க நாடான பெருவும் இதற்கு தகுதி பெற்றுள்ளது. இதனிடையே பிரபல கால்பந்து வீரர் பாவ்லோ கியுரோ போதை மருந்து புகார் எதிரொலியாக தடை விதிக்கப்பட்டுள்ளார். அவர் உலகக் கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் என மற்றொரு வீரரான லுயிஸ் அவின்குலா பிரார்த்தனை செய்ய அழைப்பு விடுத்தார்.
அதையேறறு ஏராளமான ரசிகர்கள் பாவ்லோவுக்காக பிரார்த்தனை செய்தனர். பெரு நாட்டு அதிபர் மார்ட்டின் விசாராவும் பாவ்லோவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
கோகைன் உட்கொண்டதாக சோதனையில் தெரியவந்ததால் பாவ்லோவுக்கு ஸ்விட்சர்லாந்தில் உள்ள விளையாட்டு புகார்களுக்கான மத்தியஸ்த அமைப்பு 14 மாதம் தடை விதித்ததது. அத்தடை நீக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com