இன்டர்காண்டினென்டல் கால்பந்து: இந்தியா-சீன தைபே மோதல்

மும்பையில் நடக்கவுள்ள இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும்-சீன தைபே அணியும் மோதுகின்றன. 

மும்பையில் நடக்கவுள்ள இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும்-சீன தைபே அணியும் மோதுகின்றன. 
வரும் 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசிய கால்பந்து போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்தும் வகையில் மும்பையில் இன்டர்காண்டினென்டல் கால்பந்து போட்டி வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, சீன தைபே, கென்யா, நியூஸிலாந்து உள்ளிட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.
1-ஆம் தேதி துவக்க ஆட்டத்தில் இந்தியா-சீன தைபே அணிகள் மோதுகின்றன. 2-ஆம் தேதி கென்யா-நியூஸி., 4-ஆம் தேதி-இந்தியா-கென்யா, 5-ஆம் தேதி-சீன தைபே-நியூஸி., 7-ஆம் தேதி இந்தியா-நியூஸி., 8-ஆம் தேதி சீன தைபே-கென்யா, 10-ஆம் தேதி இறுதி ஆட்டம்.
இப்போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். வீரர்கள் சிறந்த அனுபவத்தை பெறுவர். கென்யா, நியூஸி. அணிகளில் பல வீரர்கள் பல்வேறு வெளிநாட்டு கிளப் அணிகளில் விளையாடுபவர்கள் என தலைமை பயிற்சியாளர் காண்ஸ்டான்டைன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com