இன்று ராஜஸ்தான்-கொல்கத்தா மோதல்: வெளியேறப்போவது யார்?

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது ஆட்டமாக ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் புதன்கிழமை இரவு நடக்கிறது.
இன்று ராஜஸ்தான்-கொல்கத்தா மோதல்: வெளியேறப்போவது யார்?

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது ஆட்டமாக ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் புதன்கிழமை இரவு நடக்கிறது.
லீக் சுற்று ஆட்டங்களில் பல்வேறு தோல்விகள், வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு இறுதியாக நுழைந்த அணிகள் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகும். முன்னாள் சாம்பியன்களான இரு அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவுக்கு சாதகமாகவே உள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றதின் மூலம் கொல்கத்தா தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.
இந்த ஐபிஎல் சீசனின் அதிகபட்ச ஸ்கோரான 245 ரன்களையும் கொல்கத்தா எடுத்தது. பிளே ஆஃப் சுற்றில் ஆடும் 4 அணிகளில் கொல்கத்தாவுக்கு மட்டுமே உள்ளூர் மைதானத்தில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 
ராஜஸ்தான் அணி கடந்த 2008-இல் ஐபிஎல் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானின் நட்சத்திர வீரர்களான ஜோஸ்பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்கள் நாட்டு அணியில் விளையாட சென்று விட்டது பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதையும் மீறி கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வியுற்றால் இதோடு அந்த அணி வெளியேறும் நிலை உள்ளது. கொல்கத்தாவின் சுனில் நரைன், சாவ்லா, குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழற்பந்துவீச்சை ராஜஸ்தான் சமாளிக்க வேண்டியுள்ளது. அதன் பேட்டிங் வரிசை ரஹானே, சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, ஹெயின்ரிச் ஆகியோரையே நம்பி உள்ளது.
கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், கிறிஸ் லீன் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்து வருகின்றனர். மாறாக ராஜஸ்தான் அணியில் ஆர் சி ஷார்ட், கிருஷ்ணப்பா கெüதம், குல்கர்னி, உனதிகட், ஷ்ரேயஸ் கோபால் ஆகியோரின் பந்துவீச்சு குறிப்பிடும்படியாக இல்லை.
பந்துவீச்சு, பேட்டிங்கில் வலுவாக திகழும் கொல்கத்தாவை எதிர்கொண்டு வெற்றி பெற ராஜஸ்தான் பெரும் முயற்சியுடன் போராட வேண்டிய சூழல் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com