உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணிக்கு ஹாரிகேன் கேப்டன்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஹாரிகேன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஹாரிகேன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ரஷியாவில் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை உலகக் கோப்பை போட்டிகள் நடக்கின்றன. இதில் மோதவுள்ள 32 நாடுகள் தங்கள் அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டு 
வருகின்றன.
இங்கிலாந்து அணிக்கு டாட்டன்ஹாம் முன்கள வீரர் ஹாரி கேன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 24 வயதான ஹாரி 23 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 12 கோல்களை அணிக்காக அடித்துள்ளார். தேசிய கால்பந்து சங்கம் சார்பில் அணியின் மேலாளர் செüத்கேட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது தனக்கு கிடைத்த பெரிய கெüரவம் என ஹாரி கேன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com