ராஜஸ்தானை வெளியேற்றியது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெளியேற்றும் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
ராஜஸ்தானை வெளியேற்றியது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெளியேற்றும் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
இதையடுத்து, இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான 2-ஆவது தகுதிச்சுற்றில் ஹைதராபாத்துடன் மோதுகிறது கொல்கத்தா. 2 ஆண்டு தடைக்குப் பிறகு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களே எடுத்து வீழ்ந்தது.
முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீசத் தீர்மானித்தது. பேட் செய்த கொல்கத்தாவில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முன்னதாக, ஷுபம் கில் 28, கிறிஸ் லின் 18 ரன்களுக்கு வீழ்ந்தனர். சுனில் நரைன் (4), ராபின் உத்தப்பா (3), நிதீஷ் ராணாவும் (3), பின்னர் ஸ்கேன்டில்பர்ரியும் (2) ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் ரùஸல் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 49, பியூஷ் சாவ்லா ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் கிருஷ்ணப்பா கெளதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், லாஃப்லின் தலா 2 விக்கெட்டுகளும், ஷ்ரேயஸ் கோபால் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 170 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 50, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 46 ரன்கள் எடுத்தனர். ராகுல் திரிபாதி 20 ரன்கள் சேர்க்க, ஸ்டூவர்ட் பின்னி டக் அவுட்டானார்.
20 ஓவர்கள் முடிவில் ஹென்ரிச் கிளாசென் 18, கிருஷ்ணப்பா கெளதம் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் பியூஷ் சாவ்லா 2, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். ஆன்ட்ரு ரùஸல் ஆட்டநாயகன் ஆனார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com