ஸ்மார்ட் வாட்சுகளை அணிந்து விளையாடக் கூடாது: பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி கண்டிப்பு

மைதானத்தில் தினமும் எத்தனை கலோரிகளை எரிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே...
ஸ்மார்ட் வாட்சுகளை அணிந்து விளையாடக் கூடாது: பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி கண்டிப்பு

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது பாகிஸ்தான் வீரர்கள் சிலர் தங்கள் கைகளில் ஸ்மார்ட் வாட்சுகளை அணிந்திருந்தார்கள். இதையடுத்து இதுபோல ஸ்மார்ட் வாட்சுகளை அணிவது சரியா என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஆடுகளத்தில் ஸ்மார்ட் வாட்சுகளை அணியக்கூடாது என்று ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவினர் பாகிஸ்தான் வீரர்களிடம் கூறியுள்ளார்கள். மைதானத்துக்கு வருகிற வீரர்கள் செல்பேசி, ஸ்மார்ட் வாட்சுகளை ஐசிசி அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்றும் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செல்பேசி அல்லது வைஃபை ஆகியவற்றுடன் ஸ்மார்ட் வாட்சுகள் இணைக்கப்படுவதால் வெளியே இருந்து தகவல்களைப் பெற முடியும். இதன்மூலம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதால் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் வாட்சை அணிந்திருந்த பாகிஸ்தான் வீரர் அசாத் ஷஃபிக் இதுகுறித்து கூறியதாவது: மைதானத்தில் தினமும் எத்தனை கலோரிகளை எரிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே ஸ்மார்ட் வாட்சுகளை அணிந்தோம் என்று பதில் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com