ஐபிஎல்: கொல்கத்தா அணி வெற்றிக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி 

ஐபிஎல்லில் வெள்ளியன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா அணியின்  வெற்றிக்கு 175 ரன்களை இலக்காக ஹைதராபாத் அணி நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல்: கொல்கத்தா அணி வெற்றிக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி 

கொல்கத்தா: ஐபிஎல்லில் வெள்ளியன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா அணியின்  வெற்றிக்கு 175 ரன்களை இலக்காக ஹைதராபாத் அணி நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் 2018 தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெள்ளியன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சினை  தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக தீபக் ஹூடா, சகா, கலீல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஷிவம் மவி சேர்க்கப்பட்டார்.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தவான், சகா  இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்கள் எடுத்திருந்த பொழுது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் அதே ஓவரின் 5-வது பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்தவர்களில் சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் விளாச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19 ஓவர் முடிவில் 150 ரன்னைத் தொட்டது.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான், 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். 5-வது பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் சிக்ஸரும் விளாச கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி 24 ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது.

ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத். 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com