கொல்கத்தாவை சமாளிக்குமா ஹைதராபாத்?

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று 2-வது ஆட்டத்தில் புதிய உற்சாகத்துடன் காணப்படும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி சமாளிக்குமா என
கொல்கத்தாவை சமாளிக்குமா ஹைதராபாத்?

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று 2-வது ஆட்டத்தில் புதிய உற்சாகத்துடன் காணப்படும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி சமாளிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் 22-ஆம் தேதி முதல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கி உள்ளன. இதில் முதல் தகுதி ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

தொடர் வெற்றியால் கொல்கத்தா உற்சாகம்

புதன்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தானை அபாரமாக வீழ்த்தி, கொல்கத்தா 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை இரவு 2-வது தகுதி ஆட்டத்தில் கொல்கத்தா-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கடைசி நான்கு ஆட்டங்களில் கொல்கத்தா தொடர் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் தோல்வியையே சந்தித்துள்ளது. ஐபிஎல் அணிகளிலேயே சிறந்த பந்துவீச்சாளர்களை ஹைதராபாத் பெற்றுள்ளது.

வில்லியம்ஸனை சுற்றியே சுழலும் பேட்டிங்

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி பெறும் நிலை இருந்தும் கடைசி 2 ஓவர்களில் ரன்களை வாரி அளித்ததால் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ஷிகர் தவன், மணிஷ்பாண்டே, யூசுப் பதான் ஆகியோர் பேட்டிங்கில் தங்கள் பங்களிபப்பை சரிவர அளிக்காதது ஹைதராபாத் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அனல் பறக்குமா?

கொல்கத்தாவில் ஹைதராபாத் வென்ற நிலையில் ஹைதராபாதில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் வெள்ளிக்கிழமை இரவு நடக்கும் இரண்டாவது தகுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் வெல்லும் அணி 27}ஆம் தேதி மும்பையில் நடக்கும் இறுதிச் சுற்றில் சென்னை அணியுடன் மோதும்.

வலுவான ஹைதராபாத் பந்துவீச்சு 

புவனேஸ்வர் குமார், சித்தார்த்கெளல், சந்தீப் சர்மா, ரஷீத் கான் ஆகியோர் ஈடன் கார்டன் மைதானத்தின் தன்மைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வர். எனினும் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய வீரர்  ர்லோஸ் பிராத்வெயிட் கடைசி ஓவர்களில் ரன்களை அள்ளி தந்தது அணிக்குத் தோல்வியை ஏற்படுத்தியது. ஆனால் அதே  நேரத்தில்  கொல்கத்தாஅணியில் தினேஷ் கார்த்திக்,  உத்தப்பா, ரஸ்ஸல், நரைன் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகின்றனர். ஹைதராபாத் அணி பேட்டிங்கில் முற்றிலும் கேப்டன் கேன் வில்லிம்ஸனையே சார்ந்துள்ளது அதற்கு பின்னடைவாக உள்ளது.  685 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை வில்லியம்ஸன் தன் வசம் வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com