ஜப்பான் கால்பந்து கிளப்பில் இனியெஸ்டா

பார்சிலோனோ அணியின் பிரபல கால்பந்து வீரர் ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா ஜப்பானைச் சேர்ந்த விúஸல் கோபே கிளப்பில் இணைந்துள்ளார்.

பார்சிலோனோ அணியின் பிரபல கால்பந்து வீரர் ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா ஜப்பானைச் சேர்ந்த விúஸல் கோபே கிளப்பில் இணைந்துள்ளார்.
பார்சிலோனா கால்பந்து கிளப்பில் 22 ஆண்டுகளாக ஆடி வந்த இனியெஸ்டா, ஸ்பெயினின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஆவார். கடந்த 2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான இறுதிச்சுற்றில் இனியெஸ்டா அடித்த கோலால் ஸ்பெயின் உலக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அவர் முதலில் சீனாவின் ஷாங்காய் கிளப்பில் சேருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் ஜப்பானின் கால்பந்து கிளப்பான விúஸல் கோபேவில் இனியெஸ்டா இணைந்துள்ளார்.
அந்த கிளப்பின் உரிமையாளர் ஹிரோஷி மிக்டானி தனது கிளப்புக்கு இனியெஸ்டாவை வாங்குவதில் உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விúஸல் கோபே அணியின் சீருடையை இனியெஸ்டா பெற்றுக் கொண்டார்.
8 லா லிகா பட்டங்கள், 4 சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள், ஒரு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம்போன்றவை இனியெஸ்டா வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விúஸல் கோபே கிளப் ஜப்பானில் லீக் அமைப்பில் 6-வது இடத்தில் உள்ளது. இனியெஸ்டா வருகையை ஏராளமான ஜப்பானியர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com