நாளை சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல்-ரியல் மாட்ரிட் மோதல்

உக்ரைன் தலைநகர் கீவ்வில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-லிவர்பூல் அணிகள் மோதுகின்றன.
நாளை சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல்-ரியல் மாட்ரிட் மோதல்

உக்ரைன் தலைநகர் கீவ்வில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்-லிவர்பூல் அணிகள் மோதுகின்றன.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பிரபல கால்பந்து கிளப் அணிகள் மோதும் இப்போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு போட்டியில் ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. நிகழாண்டு அரையிறுதியில் பேயர்ன் முனிக் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மார்ரிட் அணியும், மற்றொரு அரையிறுதியில் ஏஎஸ் ரோமா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் எஃப்சி அணியும் வென்று இறுதிக்கு முன்னேறின. 
1981-ஆம் ஆண்டுக்கு பின் லிவர்பூல்-ரியல் மாட்ரிட் அணிகள் முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் இறுதியில் மோதுகின்றன. ரியல் மாட்ரிட் அணி 12 முறை பட்டம் வென்ற நிலையில் தற்போது ஹாட்ரிக் அடிக்க காத்துள்ளது. லிவர்பூல் அணியோ 6-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ளது.
ரியல் மாட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லிவர்பூல் அணியில் முகமது சலாவும் நட்சத்திர வீரர்களாக திகழ்கின்றனர். இந்த சீசனில் ரொனால்டோ 42 கோல்களை அடித்துள்ளார். சலாவும் 40 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக பிரபல வீரர் ஸினடேனும், லிவர்பூல் அணிக்கு ஜுர்கன் லாப்பும் செயல்படுகின்றனர். லிவர்பூல் அணி கடைசியாக 2005-ல் பட்டம் வென்றது. ஐரோப்பா உள்பட உலகின் கவனம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிச்சுற்றில் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக விலைவாசி: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பை இறுதிப் போட்டியை காண வரும் ரசிகர்கள் கடும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவதாக புகார் கூறியுள்ளனர்.
ஐரோப்பாவில் கால்பந்து மோகம் அதிகம் என்பதாலும், இரு அணிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் கீவ்வில் நடைபெறும் போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர்.
ஆனால் அந்நகருக்கு வரும் ரசிகர்களிடம் அறையில் தங்குவதற்கும், உணவு விடுதிகளிலும் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com