மல்யுத்த தேர்வு போட்டிகள்: சாக்ஷி மாலிக், சுஷில்குமாருக்கு விலக்கு

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணி தேர்வுப் போட்டியில் இருந்து ஒலிம்பிக் பதக்க வீரர்கள் சாக்ஷி மாலிக், சுஷில்குமார் உள்பட மேலும் சிலருக்கு விலக்கு தரப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த
மல்யுத்த தேர்வு போட்டிகள்: சாக்ஷி மாலிக், சுஷில்குமாருக்கு விலக்கு

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணி தேர்வுப் போட்டியில் இருந்து ஒலிம்பிக் பதக்க வீரர்கள் சாக்ஷி மாலிக், சுஷில்குமார் உள்பட மேலும் சிலருக்கு விலக்கு தரப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சம்மேளன வட்டாரங்கள் கூறியதாவது:
சுஷில்குமார், சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோர் தாங்களே சொந்தமாக பயிற்சி மேற்கொண்டு ஆசிய போட்டிகளுக்கு தயாராகி வருவதாக சம்மேளனத்துக்கு வேண்டுகோள் அனுப்பி இருந்தனர். மேலும் மேற்கண்ட வீரர்கள் அனைவரும் தங்கள் திறமையை பல்வேறு போட்டிகளில் வெளிப்படுத்தி நாட்டுக்கு பதக்கம் பெற்றுத்தந்தனர்.
அவர்களது பிரிவுகளில் வேறு எவரும் போட்டியாக இல்லாத நிலை உள்ளது. எனவே அவர்களே சுயமாக தயார் படுத்திக் கொள்வதற்கு அனுமதி தரப்படுகிறது.
மேலும் அணி தேர்வு போட்டியில் இருந்து மேற்கண்ட வீரர்களுக்கு விலக்கு தர சம்மேளனம் தீர்மானித்துள்ளது. பதக்கங்களை வெல்வதே நோக்கமாக கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்களிடமும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது எனத் தெரிவித்தன. ஆடவர் கிரேக்கோ ரோமன், ஃபிரீ ஸ்டைல் பிரிவுகளில் ஜூன் 10-ஆம் தேதி சோனேபட்டிலும், மகளிருக்கு ஜூன் 17-ஆம் தேதி லக்னெளவிலும் தேர்வு போட்டிகள் நடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com