ஸ்மார்ட் கடிகாரங்கள் அணிய கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகளுக்கு ஐசிசி தடை

கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலோ அல்லது தங்கும் அறைகளிலோ தகவல் தொடர்புக்கு உதவும் ஸ்மார்ட் கடிகாரங்களை வீரர்கள், நிர்வாகிகள் அணியக்கூடாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை
ஸ்மார்ட் கடிகாரங்கள் அணிய கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகளுக்கு ஐசிசி தடை

கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலோ அல்லது தங்கும் அறைகளிலோ தகவல் தொடர்புக்கு உதவும் ஸ்மார்ட் கடிகாரங்களை வீரர்கள், நிர்வாகிகள் அணியக்கூடாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பகுதிக்கான ஒழுங்குமுறை விதிகள் கீழ் தகவல் தொடர்புக்கு உதவும் ஸ்மார்ட் கடிகாரங்களை அணிய தடை விதிக்கப்படுகிறது. மைதானத்திலோ அல்லது தங்கும் அறைகளிலோ (டிரஸ்ஸிங் ரூம்) போன்ற இடங்களில் ஸ்மார்ட் கடிகாரங்கள் அணியக்கூடாது. இணையதளம் வசதியுடன் கூடிய எந்த சாதனத்தையும் வீரர்கள் வைத்திருத்தல் கூடாது. 
இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் அணி பங்கேற்றுள்ள டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் அப்போட்டியில் ஸ்மார்ட் கடிகாரங்களை வீரர்கள் அணியக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்ச் பிக்சிங் சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தங்கள் பணியை மேற்கொள்ள சில சாதனங்களை வைத்துக் கொள்ள அனுமதி தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com