ஆஸி. கிரிக்கெட் அணியை நேர்மையானதாக உருவாக்குவோம்

ஆஸி. கிரிக்கெட் அணியை தொழில்நுணுக்கம் நிறைந்த நேர்மையானதாக உருவாக்குவோம் என அதன் புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.
ஆஸி. கிரிக்கெட் அணியை நேர்மையானதாக உருவாக்குவோம்

ஆஸி. கிரிக்கெட் அணியை தொழில்நுணுக்கம் நிறைந்த நேர்மையானதாக உருவாக்குவோம் என அதன் புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.
 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதன் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பேங்கிராப்ட் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அப்போதைய பயிற்சியாளர் டேரன் லெமனும் பதவியை ராஜிநாமா செய்தார். இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸி. அணிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
 இதையடுத்து புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் 5 ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாட ஆஸி. அணி செல்கிறது.
 இதுதொடர்பாக லாங்கர் சனிக்கிழமை கூறியது:
 ஆஸி. அணியை தொழில்நுணுக்கம் நிறைந்த, நேர்மையான, உண்மையான அணியாக சர்வதேச அரங்கில் மீண்டும் உருவாக்குவோம். இங்கிலாந்தில் ரசிகர்கள், ஊடகங்களின் விமர்சனங்களை எதிர்கொண்டு ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம். ஆடுகளத்திலும், வெளியிலும் நல்ல முறையில் நடந்தால், ஆஸி. அணி இழந்த மதிப்பை பெறும். இதர அணிகளின் ஆட்டத்தை பார்த்து எங்கள் அணி எதையும் பின்பற்றவில்லை என்றார் லாங்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com