டி 20 கிரிக்கெட்டில் உலகிலேயே சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான்

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி சார்பில் ஆடும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெகுவாக பாராட்டி உள்ளார்.

 ஐபிஎல் கிரிக்கெட் 2018-இல் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 வயதே ஆன ரஷீத் கானை ஹைதராபாத் அணி வாங்கியது. இந்நிலையில் இந்த சீசனில் அவர் அபாரமாக பந்து வீசி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மேலும் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது பிளே ஆஃப் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக கடைசி ஓவரில் 24 ரன்களை அடித்தார் ரஷீத் கான்.
 அவரது ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது-
 முதலில் ரஷீத் கான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை மட்டுமே உணர்ந்தேன். ஆனால் தற்போது டி 20 கிரிக்கெட் விளையாட்டில் உலகிலேயே அவர் தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதை தெரிவிக்கிறேன். மேலும் அவர் பேட்டிங்கிலும் ஜொலித்து வருகிறார். ரஷீத் கான் பல்வேறு வகைகளில் பந்துவீசியது எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்துள்ளது என தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com