தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி பயிற்சி முகாமுக்கு 48 வீராங்கனைகள் தேர்வு

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி பயிற்சி முகாமுக்கு 48 வீராங்கனைகளை ஹாக்கி இந்தியா தேர்வு செய்துள்ளது.

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி பயிற்சி முகாமுக்கு 48 வீராங்கனைகளை ஹாக்கி இந்தியா தேர்வு செய்துள்ளது.
 கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்நிலையில் விரைவில் ஸ்பெயினில் சுற்றுப்பயணம், மற்றும் நெதர்லாந்தில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடக்க உள்ளன.
 இதை முன்னிட்டு இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தேசிய பயிற்சி முகாம் வரும் 28-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோயர்ட் மார்ஜின் தலைமையில் முகாம் நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com