பாகிஸ்தான் தொடர் குறித்து இந்திய அரசு தன் நிலையை தெரிவிக்க வேண்டும்: பிசிசிஐ

பாகிஸ்தானுடனான உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அரசு தன் நிலையை தெரிவிக்க வேண்டும் என பிசிசிஐதிங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தொடர் குறித்து இந்திய அரசு தன் நிலையை தெரிவிக்க வேண்டும்: பிசிசிஐ

பாகிஸ்தானுடனான உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அரசு தன் நிலையை தெரிவிக்க வேண்டும் என பிசிசிஐ திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நடைபெறவில்லை. அதுபோல இந்திய அரசின் அனுமதியின்றி பாகிஸ்தானுடன் எந்தப் போட்டித் தொடரிலும் பங்கேற்க இயலாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

இதனிடையே 2014-ல் ஏற்படுத்தப்பட்ட இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நஷ்டஈடாக 70 மில்லியன் டாலர்கள் கேட்டுள்ளது. இதில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐசிசி) தலையீட்டுக்கு முன்பாக தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக இந்திய அரசுக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

இந்திய அரசுக்கு பிசிசிஐ எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் இந்திய அணி பங்கேற்பது தொடர்பாக மத்திய அரசு தன் நிலைப்பாடு குறித்து விரிவாகத் தெரிவித்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிசிசிஐ-க்கு வசதியாக இருக்கும் என்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com