உலக மகளிர் செஸ் போட்டி: ஹம்பி, ஹரிகா டிரா

உலக மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கொனேரு ஹம்பி, ஹரிகா ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
உலக மகளிர் செஸ் போட்டி: ஹம்பி, ஹரிகா டிரா

உலக மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கொனேரு ஹம்பி, ஹரிகா ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
 ரஷியாவின் கன்டிமான்சிஸ்க் நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஹம்பி புதன்கிழமை போலந்தின் ஜோலன்டா ஸவாட்ஸ்கா உடன் மோதினார். கறுப்பு நிற காய்களுடன் ஹம்பி ஆடினார். எனினும் ஜோலண்டாவும் அவருடன் சரிநிகர் சமானமாக ஆடியதால் இரு தரப்பும் 26-ஆவது நகர்த்தலின் போது டிரா செய்ய ஒப்புக் கொண்டனர்.
 மற்றொரு ஆட்டத்தில் ஹரிகாவும், ஜார்ஜியாவின் பெலா கோடேனாஷ்விலியும் மோதினர். இதில் கடைசி வரை வெல்ல ஹரிகா போராடியும் முடியவில்லை. இரு வீராங்கனைகளுமே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடிய நிலையில் ஆட்டம் டிராவை நோக்கி சென்றதால், 64-ஆவது நகர்த்தலின் போது டிரா செய்ய ஒப்புக் கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com