பந்தை சேதப்படுத்திய விவகாரம்: தொடர்ந்து பதவி விலகும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகிகள்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர்.
பந்தை சேதப்படுத்திய விவகாரம்: தொடர்ந்து பதவி விலகும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகிகள்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர்.
 கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் உப்பு காகிதத்தை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பேங்கிராப்ட் ஆகியோர் மீது சிஏ விசாரணை நடத்தி ஓராண்டு காலம் தடை விதித்தது. இதற்கிடையே அந்த வீரர்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீண்டகாலமாகும். இதை குறைக் வேண்டும் என வீரர்கள் சங்கம் கோரியது.
 இப்பிரச்னை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சுயேச்சையான குழுவும் சிஏ நிர்வாகத்தை கடுமையாக சாடியிருந்தது. இதனால் சிஏ தலைவர் டேவிட் பீவர், சிஇஓ ஜேம்ஸ் சதர்லேண்ட், இயக்குநர் மார்க் டெய்லர் ஆகியோர் தங்கள் பதவிகளை ஏற்கெனவே ராஜிநாமா செய்தனர். அதன் தொடர்ச்சியாக அணி செயல்திறன் தலைவர் பேட் ஹோவர்ட். ஒளிபரப்பு இயக்குநர் பென் அமர்பியோ ஆகியோரும் பதவி விலகியுள்ளனர். முன்னாள் பயிற்சியாளர் டேரன் லேமனும் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
 தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் புதிய சிஇஓவாக கெவின் ராபர்ட்ஸ் பொறுப்பேற்றுள்ளார். சிஏ தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. தற்போது கிரிக்கெட் ஆட்டத்துக்கு புதிய தொடக்கம் தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com