ஓரே ஓவரில் 43 ரன்கள்: நியூஸி வீரர்கள் சாதனை

நியூஸிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர்கள் உதவியுடன் ஓரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து நார்த்தர்ன் டிஸ்ட்டிரிக்ட்ஸ் அணி வீரர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

நியூஸிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர்கள் உதவியுடன் ஓரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து நார்த்தர்ன் டிஸ்ட்டிரிக்ட்ஸ் அணி வீரர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
 அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஜோ கார்டர்-பிரெட் ஹாம்ப்டன் இணை சென்ட்ரல் டிஸ்டிரிக்டிஸ் அணியுடன் மோதிய ஆட்டத்தில் 6 சிக்ஸர்களை விளாசினர். ஆனால் எதிரணி பந்துவீச்சாளர் வில்லேம் லூதிக் மேலும் நோ பால்களை வீசினார்.
 முதல் பந்தில் 4, 6 பிளஸ் நோபால், 6 பிளஸ் நோபால், 6, 1, 6, 6,6 என மொத்தம் ஓரே ஓவரில் 43 ரன்களை கார்டர்-ஹாம்ப்டன் இணை எடுத்து உலக சாதனை புரிந்தது.
 பந்துவீச்சாளர் வில்லேம் லூதிக் 1-42 என தனது கடைசி ஓவரை வீச வந்த நிலையில் அவர் 1-85 ரன்கள் என நிறைவு செய்ய நேர்ந்தது.
 இதற்கு முன்பு ஜிம்பாப்வே அணி வீரர் எல்டன் சிகும்புரா வங்கதேசத்தில் நடைபெற்ற முதல்தர ஒரு நாள் ஆட்டத்தில் 39 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com