துளிகள்...

ரஷியாவின் கன்டிமான்சிஸ்கில் நடைபெற்று வரும் உலக மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் துரோணவல்லி ஹரிகா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

*ரஷியாவின் கன்டிமான்சிஸ்கில் நடைபெற்று வரும் உலக மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் துரோணவல்லி ஹரிகா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே நேரத்தில் கிராண்ட்மாஸ்டர் கொனேரு ஹம்பி, போலந்தின் ஜோலன்டாவிடம் தோல்வியுற்று வெளியேறினார்.
 *சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிக்கு இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
 *இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்யன் ஆஸ்திரிய டேபிள்டென்னிஸ் ஓபன் போட்டி தகுதிச் சுற்றில் உலகின் 17-ஆம் நிலை வீரர் சாங்கின் ஜோங்கை 6-11, 13-11, 11-3, 11-8, 11-6, 11-6 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com