மகளிர் டி20 உலகக் கோப்பை: இன்று இந்தியா-நியூஸி மோதல்

மே.இ.தீவுகளின் கயானா பிராவென்டிஸில் தொடங்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி துவக்க ஆட்டத்தில் இந்தியாவும்-நியூஸிலாந்து மோதுகின்றன

மே.இ.தீவுகளின் கயானா பிராவென்டிஸில் தொடங்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி துவக்க ஆட்டத்தில் இந்தியாவும்-நியூஸிலாந்து மோதுகின்றன.
 50 ஓவர் ஒருநாள் ஆட்டத்தில் வலிமையானதாக காணப்படும் இந்திய அணி கடந்த 2017-உலக் கோப்பையில் இரண்டாம் இடம் பெற்றது.
 ஆனால் டி20 ஆட்டத்தில் இந்தியாவின் பங்கு குறிப்பிடும்படி இல்லை. இந்நிலையில் ஹர்மன்ப்ரீத் கெüர் தலைமையிலான இளம் வீராங்கனைகள் கொண்ட அணி இதில் பங்கேற்கிறது.
 முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வெல்லும் நோக்குடன் தொடக்க ஆட்டத்தில் வலுவான நியூஸியை எதிர்கொள்கிறது. முந்தைய 5 டி20 உலகக் கோப்பைகளில் இந்திய பட்டம் வென்றதில்லை. அதிகபட்சமாக 2009, 2010-இல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 ஸ்மிருதி மந்தானா, ஜேமியா ரோட்ரிக்ஸ், மிதாலி ராஜ், தனியா பாட்டியா ஆகியோர் பேட்டிங்கில் வலிமை சேர்க்கின்றனர். பெüலிங்கில் பூனம் யாதவ், மான்சி ஜோஷி, அனுஜா பட்டீல், தீப்தி சர்மா, ஆகியோர் கைகொடுப்பர் எனத் தெரிகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com