மகளிர் டி20 உலகக் கோப்பை தொடக்கம்: இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 15-ஆவது ஓவரின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை குவித்தது.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடக்கம்: இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 15-ஆவது ஓவரின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை குவித்தது.
 நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகள், மூன்று முறை சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட உலகின் முன்னணி அணிகள் இடம் பெற்றுள்ள இப்போட்டியில் இளம்வீராங்கனைகளை கொண்ட இந்தியாவும் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் நோக்கில் களமிறங்கியுள்ளது.
 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி மே.இ.தீவுகளில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கயானாவின் பிராவிடென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும்-நியூஸிலாந்தும் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
 தொடக்கமே அதிர்ச்சி: இந்திய அணி தரப்பில் தனியா பாட்டியா, ஸ்மிருதி மந்தானா ஆகியோர் தொடக்க இணையாக களமிறங்கினர். ஆனால் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தனியா பாட்டியா 9, மந்தானா 2 ரன்களுக்கு நியூஸி வீராங்கனை டஹுஹு பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
 முதன்முறையாக சர்வதேச போட்டியில் ஆடிய தயாளன் ஹேமலதா 15 ரன்களுக்கு கஸ்பெரக் பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
 ஜெமிமா-ஹர்மன்ப்ரீத் இணை அதிரடி: பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ்-கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் இணை நிலைத்து ஆடி ரன்களை சேகரித்தது. 13 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோரை 100-ஐக் கடந்தது.
 ஜெமிமா 59: 18.2 ஓவரின் போது, 7 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 59 ரன்களை எடுத்த ஜெமிமா, ஜெஸ் வாட்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
 அப்போது 4 விக்கெட் இழப்புக்கு இந்தியா 174 ரன்களை எடுத்திருந்தது.
 ஹர்மன்ப்ரீத் விஸ்வரூபம்: இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 8 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 103 ரன்களை அதிரடியாக குவித்து, டெவின் பந்துவீச்சில் வெளியேறினார்.
 இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 194 ரன்களை குவித்தது. வேதா கிருஷ்ணமூர்த்தி 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். டஹுஹு 2-18, வாட்கின், கஸ்பெரேக், டெவின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
 நியூஸிலாந்து 160/9: 195 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூஸி தரப்பில் சூஸிபேட்ஸ்-அன்னா பீட்டர்சன் களமிறங்கினர். அன்னா 14, சோபி டெவின் 9 , அமி சட்டர்வெயிட் 3 ரன்களுக்கும், ஜெஸ் வாட்கின் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அபாரமாக ஆடிய தொடக்க வீராங்கனை சூஸிபேட்ஸ் 8 பவுண்டரியுடன் 50 பந்துகளில் 67 ரன்களை குவித்து வெளியேறினார். இப்போட்டியில் சூஸி பேட்ஸ் தனது 20-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அவருக்கு பின் மேடி கிரீன் 2 ரன்களுக்கு வெளியேறினார். இறுதியில் 8 பவுண்டரியுடன் 39 ரன்களை சேர்த்து அபாரமாக ஆடி கேட்லி மார்ட்டின் வெளியேறினார்.ஹெய்லி ஜென்ஸன் 1, கஸ்பரெக் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து நியூஸி 160 ரன்களை சேர்த்திருந்தது.
 ஹேமலதா,பூனம் அபாரம்: இந்திய தரப்பில் தயாளன் ஹேமலதா, பூனம் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர். அருந்ததி, ராதா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
 இறுதியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. டி20 ஆட்டத்தில் முதல் சதமடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பெற்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com