இலங்கை கிரிக்கெட் வீரர் திஹாரா சஸ்பெண்ட்

டி10 லீக் போட்டியில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறி இலங்கை முன்னாள் ஆல்ரவுண்டர் திஹாரா லோகுதிகேவை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் திஹாரா சஸ்பெண்ட்


டி10 லீக் போட்டியில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறி இலங்கை முன்னாள் ஆல்ரவுண்டர் திஹாரா லோகுதிகேவை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த 2017 இல் டி10 லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கையின் முன்னாள் ஆல்ரவுண்டர் திஹாரா மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை ஐசிசி ஊழல்தடுப்புக் குழு விசாரித்தது. 
ஆட்டத்தின் போக்கை மாற்றி, முடிவை நிர்ணயித்தல், வீரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு விதிமீறலில் ஈடுபட வலியுறுத்தல் போன்ற புகார்களின் கீழ் திஹாராவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இவர் இலங்கை அணிக்காக 9 ஒருநாள் மற்றும் 2 டி20 ஆட்டங்களில் ஆடியவர். டி10 ஆட்டத்தில் விளையாடமலேயே திஹாரா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் பதிலளிக்க 14 நாள்கள் 
அவகாசத்தை வழங்கியுள்ளது ஐசிசி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com