ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிராக வலுவான நிலையில் ஹைதராபாத் 523/7

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் குரூப் பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழகத்துக்கு எதிராக ஹைதராபாத் அணி 523/7 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதன் கேப்டன் அக்ஷத் ரெட்டி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிராக வலுவான நிலையில் ஹைதராபாத் 523/7


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் குரூப் பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழகத்துக்கு எதிராக ஹைதராபாத் அணி 523/7 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதன் கேப்டன் அக்ஷத் ரெட்டி 248 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னையில் இரு அணிகள் இடையே நடைபெறும் ஆட்டத்தின் முதல் நாளன்று ஹைதராபாத் 249/3 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை கேப்டன் அக்ஷத் ரெட்டி-சந்தீப் இணை தமிழக பெளலர்களை பதம் பார்த்தனர். சந்தீப் 1 சிக்ஸர், 15 பவுண்டரியுடன் 221 பந்துகளில் 130 ரன்களை குவித்தார். இருவரும் இணைந்து 246 ரன்களை சேர்த்தனர். 7-ஆவது விக்கெட்டுக்கு அக்ஷத்-சாகேத் (42) இணை நூறு ரன்களை சேர்த்தது.
அக்ஷத்தின் 248 ரன்களில் 22 பவுண்டரி, 3 சிக்ஸர்களும் அடங்கும். தமிழக கேப்டன் இந்திரஜித் 8 பெளலர்களை மாற்றியும் பலனில்லை.
இறுதியில் 177 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 523 ரன்களை எடுத்தது.
கொல்கத்தா
மேற்கு வங்கம் 149.3 ஓவர்களில் 510/9, மனோஜ் திவாரி 201, கெளஷிக் கோஷ் 100, ஈஸ்வரன் 86, டிக்ளேர். சுபம் சர்மா 5-59, ம.பி. 15 ரன்கள்.
திருவனந்தபுரம்
ஆந்திரம் 99.4 ஓவர்களில் 254, ரிக்கி பூய் 109, சிவ் சரண் 45, அக்ஷய் 4-64. கேரளம், 78 ஓவரில் 227/1, ஜலஜ் சக்சேனா 127, அருண் கார்த்திக் 56.)
புதுச்சேரி
புதுச்சேரி சிஏபி 389, டோக்ரா 101, அபிஷேக் நாயர் 57, ரோஹித் 100, , குரீந்தர் சிங் 4, லனான்சிங் 2 விக்கெட் வீழ்த்தினர்.
மேகாலயா 161/6, விஸ்வா 31, லெமர் 16.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com