ஐபிஎல்: 22 வீரர்களை தக்க வைத்தது சிஎஸ்கே

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), 2019-ஆம் ஆண்டு சீசனுக்காக தனது அணியில் 22 பேரை தக்க வைத்துக்கொள்கிறது.


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), 2019-ஆம் ஆண்டு சீசனுக்காக தனது அணியில் 22 பேரை தக்க வைத்துக்கொள்கிறது. 3 வீரர்களை மட்டும் விடுவிக்கிறது.
இதுதொடர்பாக சென்னை அணி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், இந்திய வீரர்கள் கனிஷ்க் சேத், ஷிதிஷ் சர்மா ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் மார்க் வுட் ஒரு ஆட்டத்தில் விளையாடியுள்ள நிலையில், சேத் மற்றும் சர்மா ஒரு ஆட்டத்தில் கூட விளையாடியதில்லை.
2019-ஆம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும், விடுவிக்கும் வீரர்களின் விவரங்களை நவம்பர் 15-ஆம் தேதிக்குள் வழங்குமாறு அணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சென்னை அணியில் தற்போது தோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, டூ பிளெஸ்ஸிஸ், டேவிட் வில்லி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். காயம் கண்டுள்ள நியூஸிலாந்து ஆல் ரவுண்டர் மிட்செல் சேன்ட்னர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை அணி மாற்று வீரரை கோரவில்லை. டிசம்பர் 15 ஏலத்தில் சென்னை அணி ரூ.8.5 கோடியுடன் பங்கேற்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com