துளிகள்...

துளிகள்...

 மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் அயர்லாந்து அணியை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.


 ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ், நுரையீரல் நோய் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


 முகமது ஷமியின் மனைவி பெயரிலான காசோலை மோசடி வழக்கு விசாரணைக்காக, ஷமி ஜனவரி 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.


 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.


 அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் மூத்த தேர்வுக் குழு பதவியிலிருந்து எஸ்.பி. மிஸ்ரா, ஜீஷான் அலி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.


 ஜோர்டானுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்திய அணியில் கேப்டன் சுனில் சேத்ரி இல்லாதது அணிக்கு பின்னடைவு என பயிற்சியாளர் கான்ஸ்டன்டீன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com