ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் சிந்து, சமீர்

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் சிந்து, சமீர்


ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தாய்லாந்தின் நிட்சாவ்ன் ஜின்டாபோலை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-15, 13-21, 21-17 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
இதன்மூலமாக ஜின்டாபோலுக்கு எதிராக சிந்து தனது 4-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார். சிந்து தனது அடுத்த சுற்றில் தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை சந்திக்கிறார். ஹியூனை இதுவரை 13 முறை சந்தித்துள்ள சிந்து, அவரை 8 முறை வெற்றி கண்டுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா 21-17, 21-14 என்ற செட்களில் தாய்லாந்திந் சுப்பான்யு அவிஹிங்சனோனை வீழ்த்தினார். 2-ஆவது சுற்றில் அவர் சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங்கிடம் இருந்து கடும் சவாலை எதிர்கொள்ள இருக்கிறார்.
இதனிடையே, ஆடவர் பிரிவில் பங்கேற்றிருந்த மற்றொரு இந்தியரான சாய் பிரணீத், தனது முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார். அவரை தாய்லாந்தின் கோசித் பெட்பிரதாப் 21-16, 11-21, 15-21 என்ற செட்களில் 62 நிமிடங்களில் வீழ்த்தினார். இத்துடன் கோசித்தை 4 முறை சந்தித்துள்ள பிரணீத்துக்கு இது முதல் தோல்வியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com