அயல்நாடுகளில் பிற அணிகளும் சரிவர விளையாடாத நிலையில் இந்தியாவை மட்டுமே விமர்சனம் செய்வது ஏன்? 

அயல்நாடுகளில் பிற அணிகளும் சரிவர விளையாடாத நிலையில் இந்தியாவை மட்டுமே விமர்சனம் செய்வது ஏன் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பினார்.

அயல்நாடுகளில் பிற அணிகளும் சரிவர விளையாடாத நிலையில் இந்தியாவை மட்டுமே விமர்சனம் செய்வது ஏன் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பினார்.
டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சென்றுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரவிசாஸ்திரி செய்தியாளர்களிடம் கூறியதாவது-
கிரிக்கெட் மீதான கோலியின் ஆக்ரோஷப்போக்கு என்றும் குறையாது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 டெஸ்ட் ஆட்டங்களில் ஆஸி வீரர்கள் அமைதியாக செயல்பட்டாலும் இது தொடரும். ஆஸியில் விளையாட விரும்பும் கோலிக்கு இங்குள்ள ஆடுகளங்களும் சாதகமாக இருக்கும்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களில் பெற்ற தோல்வியில் இருந்து நிறைய பாடங்களை கற்றுள்ளோம். மேலும் 2014 ஆஸி சுற்றுப்பயணத்தில் கிடைத்த அனுபவத்தையும் கொண்டு தற்போதைய தொடரில் ஆடுவோம்.
கடந்த 5 ஆண்டுகளில் நாம் எவ்வாறு விளையாடியுள்ளோம் என்பதையும் பார்த்து, ஆஸி. அணியுடன் கடைசியாக நாம் ஆடிய போட்டிகளையும் வைத்து தன்னம்பிக்கையோடு உள்ளோம். பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வீரர்கள் நிறைய அனுபவங்களை பெற்றுள்ளனர்.
பாடங்களை அவர்கள் கற்றிருந்தால் அது மிகவும் நல்லது.
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் சிறப்பாக ஆட வேண்டும் என்பது குறிக்கோளாகும். அதே நேரத்தில் பல்வேறு அணிகளின் வெளிநாட்டுப் பயணங்களை ஒப்பிட்டு பார்த்தால் சில அணிகளே தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளன.
இதில் இந்தியாவை மட்டுமே ஏன் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கின்றனர். 
ஆஸி. தென்னாப்பிரிக்க அணிகள் சில ஆண்டுகள் வெளிநாட்டு தொடர்களிலும் வெற்றி பெற்று வந்தனர். ஆனால் அவர்களது நிலையும் தற்போது மாறி விட்டது..
இந்த முறை நிலைமை மாறும். டெஸ்ட் ஆட்டங்களை கவனித்தால் ஸ்கோர்கள் மூலமே இதை அறியலாம். கடுமையான போட்டிக்கு இடையே நடைபெற்ற ஆட்டங்களில் நாம் தோல்வியடைந்து தொடரையும் இழக்க நேரிட்டது என்றார் சாஸ்திரி.
இந்திய அணி கடந்த 1947 முதல் ஆஸ்திரேலியாவில் 11 தொடர்களில் இதுவரை ஒருமுறை கூட வெல்லவில்லை. முந்தைய 2014-15 கோடைக்கால சுற்றுப்பயணத்திலும் 2-0 என தொடரை இந்தியா இழந்திருந்தது. அப்போது தோனி தனது டெஸ்ட் கேப்டன் பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் வரும் புதன்கிழமை 21-ஆம் தேதி முதல் டி20 ஆட்டத்தில் ஆஸியுடன் மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com