உலக மகளிர் குத்துச்சண்டை: காலிறுதியில் சோனியா, பிங்கி, சிம்ரஞ்சித் கெளர்

10-ஆவது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிக்கு இந்திய வீராங்கனைகள் சோனியா சஹால் (57 கிலோ), சிம்ரஞ்சித் கெளர் 64 கிலோ) பிங்கி ஜங்கரா (51 கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு தகுதி
உலக மகளிர் குத்துச்சண்டை: காலிறுதியில் சோனியா, பிங்கி, சிம்ரஞ்சித் கெளர்

10-ஆவது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிக்கு இந்திய வீராங்கனைகள் சோனியா சஹால் (57 கிலோ), சிம்ரஞ்சித் கெளர் 64 கிலோ) பிங்கி ஜங்கரா (51 கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
புது தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 300 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மேரி கோம் தலைமையில் 10 பேர் கொண்ட இந்திய அணியும் கலந்து கொண்டுள்ளது. மூத்த வீராங்கனை மேரி கோம் 6-ஆவது முறையாக தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில் மற்றொரு வீராங்கனை சரிதா தோல்வியுற்று வெளியேறினார்.
எனினும் இளம் வீராங்கனைகள் தங்கள் வெற்றிப்பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.
திங்கள்கிழமை நடைபெற்ற 57 கிலோ பிரிவு ஆட்டத்தில் சோனியா சஹால் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் ஸ்டான்மிரா பெட்ரோவாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.  காலிறுதியில் அவர் கொலம்பியாவின் அரியஸ் காஸ்டென்டாவை எதிர்கொள்கிறார்.
ஸவிட்டி போரா தோல்வி: அதே நேரத்தில் ஸவிட்டி போரா 75 கிலோ எடைப்பிரிவில் போலந்து வீராங்கனை எலிசபெட்டாவிடம் தோல்வியுற்று வெளியேறினார்.
ஸவிட்டி முந்தைய 2014 போட்டியில் 81 கிலோ பிரிவில் வெள்ளி வென்றிருந்தார்.
பயிற்சியாளர் ஆட்சேபம்:
ஸவிட்டி போரா ஆட்டத்தில் நடுவர்கள் முடிவு குறித்து பயிற்சியாளர் சிவ் சிங் ஆட்சேபம் தெரிவித்தார். இரண்டாவது சுற்றில் ஸவிட்டியை எதிரணி வீராங்கனை குத்து விடாமல் தள்ளி விட்டார். இதனால் புள்ளிகள் அடிப்படையில் அவர் தோல்வியடையவில்லை. ஆனால் நடுவர்கள் நிர்ப்பந்த்த்தால் வெற்றியை எதிர் தரப்பு வீராங்கனைக்கு அளித்து விட்டனர் என்றார்.
சிம்ரஞ்சித் கௌர் வெற்றி: 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கெளர் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்காட்லாந்தின் மேகன் ரீய்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 
பிங்கி ஜங்கரா வெற்றி: மேலும் நாக் அவுட் சுற்றில் 51 கிலோ பிரிவில் இந்திய இளம் வீராங்கனை பிங்கி ஜங்ரா 5-0 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்தின் எபோனி ஜோன்ûஸ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 
நடுவர்கள் மீது பெட்ரோவா ஊழல் புகார்: இதற்கிடையே சோனியா சஹாலிடம் தோல்வியுற்ற பல்கேரியாவின் முன்னாள் சாம்பியன் ஸ்டான்மிரா நடுவர்கள் மீது ஊழல் புகார் கூறினார். நடுவர்களின் முடிவு பாரபட்சமாக உள்ளது என புகார் எழுப்பினார். இதுகுறித்து விசாரிப்பதாக ஏஐபிஏ கூறி விசாரணை நடத்தியது.
இதற்கிடையே நடுவரின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து மைதானத்தில் தண்ணீர் பாட்டிலை பல்கேரிய பயிற்சிôயளர் பிட்டர் லெúஸாவ் வீசினார். இதுகுறித்து விசாரித்த ஏஐபிஏ அவரை சஸ்பெண்ட் செய்து அங்கீகாரத்தையும் பறித்து விட்டது.
மேலும் குத்துச்சண்டையில் நடுவர்களின் செயல்பாடு குறித்து பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. ஒலிம்பிக்கில் தொடர்ந்து குத்துச்சண்டை இடம் பெற வேண்டும் என்றால் நடுவர்களின் செயல்பாடும் சீராக இருக்க வேண்டும் என ஐஓசி கூறியுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி: ஆன்லைனில் டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்

ஒடிஸாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
புவனேசுவரத்தின் கலிங்கா மைதானத்தில் இப்போட்டிகள் வரும் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நவம்பர் 27-ஆம் தேதி புவனேசுவரத்திலும், 28-ஆம் தேதி கட்டாக்கிலும் நடக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி, நடிகர் ஷாருக்கான் கலைநிகழ்ச்சி உள்ளிட்டவையும் நடக்கின்றன.
ஆன்லைனில் டிக்கெட் விற்பனை: போட்டிக்கான டிக்கெட் விற்பனை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என ஹாக்கி இந்தியா தனது அதிகாரபூர்வ சுட்டுரை (டுவிட்டர்) தெரிவித்துள்ளது. புவனேசுவரத்தில் தொடக்க விழாவுக்கு 10,500 டிக்கெட்டுகளும், கட்டாக்கில் 28-ஆம் தேதி நடைபெறும் விழாவுக்கு 30,000 டிக்கெட்டுகளும் விற்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட்டுகள் விநியோகம் கலிங்கா மைதானத்தில் 22-ஆம் தேதி நுழைவு வாயில் 4-இலும், நகரம் முழுவதும் இதர இடங்களிலும் நடைபெறும். கட்டாக் விழாவுக்கான டிக்கெட்டுகளும் நகரில் பல்வேறு பகுதிகளில் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் டிக்கெட் விநியோகத்துக்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும். இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, உள்பட 16 நாடுகளின் அணிகள் இதில் கலந்து கொள்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com