இந்தியா விளையாடும் ஒரே பயிற்சி ஆட்டத்துக்கு அனுபவம் குறைந்த ஆஸி. வீரர்கள் தேர்வு!

சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் இடம்பெறக்கூடிய கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது... 
இந்தியா விளையாடும் ஒரே பயிற்சி ஆட்டத்துக்கு அனுபவம் குறைந்த ஆஸி. வீரர்கள் தேர்வு!

கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸி. சென்றுள்ளது.

டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி 4 நாள்கள் கொண்ட முதல்தர ஆட்டத்தில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடருக்கு முந்தைய பயிற்சி ஆட்டமாக இந்திய அணி விளையாடும் ஒரே ஆட்டம் இதுதான். டிசம்பர் 6 முதல் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.

சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் இடம்பெறக்கூடிய கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள 12 வீரர்களில் இரு வீரர்கள் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார்கள். யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய நான்கு வீரர்களும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனுபவம் குறைந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவதால் இந்திய அணிக்குப் போதுமான பயிற்சிகள் கிடைக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

நவம்பர் 28 அன்று இந்த ஆட்டம்  தொடங்கவுள்ளது. இந்த அணியின் பயிற்சியாளராக கிரீம் ஹிக்கும் துணை பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீதரனும் பணியாற்றவுள்ளார்கள். இந்த ஆட்டம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையத்தளத்தில் (cricket.com.au) நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணி: சாம் வொயிட்மேன் (கேப்டன்), மேக்ஸ் பிரையண்ட், ஜேக் கார்டர், ஜாக்சன் கோல்மேன், ஹாரி கான்வே, டேனியல் ஃபாலின்ஸ், டேவிட் கிராண்ட், ஆரோன் ஹார்டி, ஜொனாதன் மெர்லோ, ஹாரி நீல்சன் (விக்கெட் கீப்பர்), டார்சி ஷார்ட், பரம் உப்பால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com