சையத் மோடி பாட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் வெற்றி

லக்னெளவில் நடைபெறும் சையத்மோடி உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் முதல் சுற்று ஆட்டங்களில் சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
சையத் மோடி பாட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் வெற்றி


லக்னெளவில் நடைபெறும் சையத்மோடி உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் முதல் சுற்று ஆட்டங்களில் சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-10, 21-10 என மோரீஷஸின் கேட் பூ குனேவை வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் காமன்வெல்த் முன்னாள் சாம்பியன் பாருபல்லி காஷ்யப் 21-14, 21-12 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் தனோங்சக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 
சாய் பிரணீத் 21-12, 21-10 என ரஷிய வீரர் செர்ஜி சிராந்தை வீழ்த்தினார். அதே நேரத்தில் இரட்டையர் பிரிவில் முதல்நிலை இணையான பிரணவ்-சிக்கி ரெட்டி 14-21, 11-21 என்ற கேம் கணக்கில் சீனாவின் ரென் ஸியாங்கு-சூ சவோமின் இணையிடம் தோல்வியுற்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com