துளிகள்...

 திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் 62-ஆவது தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பஞ்சாப்பின் அன்ஜும் மொட்கில் ஏர் ரைபிள் பிரிவில் 5 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதே நேரத்தில் ஜூனியர் பிரிவில் ஹரியாணாவின் ஷிரின் கோதராவும் 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.


 புணேயில் நடைபெற்று வரும் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சசிகுமார் முகுந்த்ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 


 ரஷிய உலகக் கோப்பை 2018-ஐ காட்டிலும் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு பிஃபா தலைவர் இன்பேன்டினோ எச்சரித்துள்ளார்.


 ஜெர்மனியின் காட்பஸ் நகரில் வியாழக்கிழமை தொடங்கும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளார் நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர். 4 பேர் கொண்ட அணியில் அருணா ரெட்டி, அஷிஷ் குமார், ராகேஷ் பத்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


 ஆந்திரத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு ஆட்டத்தில் தமிழகம் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்துள்ளது. முன்னதாக ஆந்திரம் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com