நட்பு ஆட்டங்கள்: பிரான்ஸ், பிரேஸில், இத்தாலி வெற்றி

வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கால்பந்து நட்பு ஆட்டங்களில் பிரான்ஸ், பிரேஸில், இத்தாலி அணிகள் வெற்றி பெற்றன.
பெனால்டி மூலம் கோலடித்த பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஜெரெளட்.
பெனால்டி மூலம் கோலடித்த பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஜெரெளட்.


வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கால்பந்து நட்பு ஆட்டங்களில் பிரான்ஸ், பிரேஸில், இத்தாலி அணிகள் வெற்றி பெற்றன.
பாரிஸில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி, உருகுவே அணியை எதிர்கொண்டது. இதில் ஆலிவர் ஜிரெளட் 52-ஆவது நிமித்தில் பெனால்டி மூலம் அடித்த கோல் வெற்றி கோலானது. கடந்த ரஷிய உலகக் கோப்பை போட்டியிலும் உருகுவே அணியை 1-0 என பிரான்ஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேஷன்ஸ் லீக் போட்டியில் நெதர்லாந்திடம் பெற்ற அதிர்ச்சித் தோல்விக்கு ஆறுதல் தரும்வகையில் பிரான்ஸ் அணிக்கு இந்த வெற்றி அமைந்தது.
பிரேஸில் வெற்றி: அதே நேரத்தில் இங்கிலாந்தின் மில்டன்கெயின்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியன் பிரேஸில் 1-0 என ஆப்பிரிக்க அணியான கேமரூனை வென்றது. ரிச்சர்லிஸன் அடித்த ஓரே கோல் மூலம் பிரேஸில் 1-0 என வென்றது.
இத்தாலி வெற்றி: பெல்ஜியத்தின் ஜெங்க் நகரில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தியது.
கடந்த ரஷிய உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் இத்தாலி தனது அணியை கட்டமைத்து வருகிறது. புதிய பயிற்சியாளர் மான்சினி தலைமையில் நேஷன்ஸ் லீக் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட இத்தாலிக்கு இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது.
94-ஆவது நிமிடத்தில் பொலிடேனோ வெற்றி கோலை அடித்தார்.
மாப்பே, நெய்மர் காயம்: உருகுவே அணியுடன் மோதிய ஆட்டத்தின் போது பிரான்ஸ் பார்வர்ட் கிளியன் மாப்பே காயமடைந்து முதல் பாதியிலேயே வெளியேற நேர்ந்தது. அதே நேரத்தில் பிரேஸில் நட்சத்திர வீரர் நெய்மரும், கேமரூன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காலில் காயம் ஏற்பட்டு வெளியேறினார்.
இரு வீரர்களும் பிரான்ஸ் லீக் சாம்பியன் பிஎஸ்ஜி அணியில் ஆடி வருகின்றனர். வரும் 28-ஆம் தேதி லிவர்பூல் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் நடக்கவுள்ள நிலையில் இருவரும் காயமுற்றது பிஎஸ்ஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com