மகளிர் டி20 உலகக் கோப்பை: நாளை அரையிறுதி ஆட்டம் இங்கிலாந்தை பழிதீர்க்கும் முனைப்பில் இந்தியா?

மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது இந்திய அணி.
இந்திய அணி வீராங்கனைகள்.
இந்திய அணி வீராங்கனைகள்.


மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது இந்திய அணி.
கடந்த 2017 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பெற்ற தோல்விக்கு இந்தியா பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மே.இ.தீவுகளில் நடைபெறும் இப்போட்டிகள் தற்போது அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகள் வியாழக்கிழமை மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து-இந்தியா வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
குரூப் பி பிரிவில் இந்திய அணி பலமான நியூஸியை 34 ரன்கள் வித்தியாசத்திலும், 3 முறை சாம்பியன் ஆஸி.யை 48 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அனைத்து ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்றது. 
அதே நேரத்தில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணி இரண்டாம் இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தற்போது ஒரு நாள் உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக உள்ள அந்த அணி, டி 20 ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 2017-இல் லண்டனில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெறும் 9 ரன்கள் வித்தியாசத்திலேயே இங்கிலாந்து வெல்ல முடிந்தது.
அந்த அணியில் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கெளர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஹர்மன்ப்ரீத் கெளர் மீண்டும் உதவுவாரா?: குரூப் ஆட்டங்களில் நியூஸிக்கு எதிராக சதம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 43 ரன்களை விளாசினார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர்.
அதே போல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் துடிப்புடன் ஆடினால் வெற்றி வசமாகும்.
மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை.
பந்துவீச்சில் தயாளன் ஹேமலதா, தீப்தி சர்மா, பூனம் யாதவ், ராதா யாதவ் ஆகியோர் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். அருந்ததி ரெட்டி, மான்சி ஜோஷி ஆகியோருக்கு இன்னும் தங்கள் திறமையை வெளிப்படுத்த சரியான வாய்óபு கிடைக்கவில்லை.
அனைத்து ஆட்டங்களையும் கயானாவில் ஆடிய இந்தியா, தற்போது ஆண்டிகுவாவில் பகலிரவு ஆட்டத்தில் விளையாட உள்ளது.
வலுவான இங்கிலாந்து பெளலிங்: அதே நேரத்தில் இங்கிலாந்து அணி பலமான வேகப்பந்து வீச்சை கொண்டுள்ளது. அன்யா ஷ்ருப்சோல், நடாலி ஸிவர், டேனி வயாட், ஹீதர் நைட் ஆகியோர் பந்துவீச்சில் கைகொடுக்கின்றனர். பேட்டிங்கில் டேம்மி பீமெளன்ட், சோபியா, ஏமி ஜோன்ஸ் ஆகியோரை எதிர்பார்த்துள்ளது அந்த அணி. இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் வென்று இறுதிக்கு முன்னேறுமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com