முதல் டெஸ்டில் சதமடித்து 18 வயது பிருத்வி ஷா சாதனை!

99 பந்துகளில் சதமடித்து, முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்கிற சாதனையை...
முதல் டெஸ்டில் சதமடித்து 18 வயது பிருத்வி ஷா சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வரும் 18 வயது பிருத்வி ஷா,  99 பந்துகளில் சதமடித்து சாதனை செய்துள்ளார். 

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆரம்பம் முதல் 18 வயது பிருத்வி ஷா அற்புதமாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம் தனது முதல் டெஸ்டில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 18 வருடம் 329 நாளில் இச்சாதனையைச் செய்துள்ளார். இதற்கு முன்பு 20 வருடம் 126 நாள்களில் அப்பாஸ் அலி பைக், இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதமடித்ததே சாதனையாக இருந்தது. 

உணவு இடைவேளையின்போது இந்திய அணி 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. ஷா 75, புஜாரா 56 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இதன்பிறகும் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார் பிருத்வி ஷா. இதனால் பவுண்டரிகள் தொடர்ந்து கிடைத்தன. எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 பந்துகளில் சதமெடுத்த தவனின் சாதனையை பிருத்வி ஷாவால் தகர்க்க முடியவில்லை. 99 பந்துகளில் சதமடித்து, முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். மேலும் இளம் வயதில் சதமடித்த வீரர்களின் பட்டியலில் பிருத்வி ஷா 7-ம் இடம் பிடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com