புதிய இளம் நட்சத்திரம் பிருத்வி ஷா: முதல் சதத்தில் படைத்த சாதனைகள்!

134 ரன்கள் எடுத்துள்ள பிருத்வி ஷா, இதன் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார்...
புதிய இளம் நட்சத்திரம் பிருத்வி ஷா: முதல் சதத்தில் படைத்த சாதனைகள்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தனது முதல் டெஸ்ட் போட்டியில் 18 வயது பிருத்வி ஷா,  99 பந்துகளில் சதமடித்துள்ளார். 134 ரன்கள் எடுத்துள்ள பிருத்வி ஷா, இதன் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார். முக்கியமாக, முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்கிற சாதனை அவர் வசமாகியுள்ளது.

இளம் வயதில் டெஸ்ட் சதமடித்த வீரர்கள் 

முஹமது அஷ்ரஃபுல் (வங்கதேசம்) - 17 வருடம் 61 நாள்கள் vs இலங்கை, 2001
முஷ்டாக் முஹமது (பாகிஸ்தான்) -17 வருடம் 78 நாள்கள், இந்தியா, 1961
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 17 வருடம் 107 நாள்கள், vs இங்கிலாந்து, 1990
ஹமில்டன் மசாகட்ஷா (ஜிம்பாப்வே) - 17 வருடம் 352 நாள்கள், vs மே.இ., 2001
இம்ரான் நஸிர் (பாகிஸ்தான்) 18 வருடம், 154 நாள்கள், vs மே.இ., 2000
சலீம் மாலிக் (பாகிஸ்தான்) - 18 வருடம், 323 நாள்கள், vs இலங்கை, 1982
பிருத்வி ஷா (இந்தியா), 18 வருடம் 329 நாள்கள் vs மே.இ., 2018

அறிமுக டெஸ்டில் சதமடித்த இளம் வீரர்கள்

முஹமது அஷ்ரஃபுல் (வங்கதேசம்) - 17 வருடம் 61 நாள்கள் vs இலங்கை, 2001
ஹமில்டன் மசாகட்ஷா (ஜிம்பாப்வே) - 17 வருடம் 352 நாள்கள், vs மே.இ., 2001
சலீம் மாலிக் (பாகிஸ்தான்) - 18 வருடம், 323 நாள்கள், vs இலங்கை, 1982
பிருத்வி ஷா (இந்தியா), 18 வருடம் 329 நாள்கள் vs மே.இ., 2018

* முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த 15-வது இந்திய வீரர் 

அறிமுக டெஸ்டில் சதமடித்த இந்திய வீரர்கள்

லாலா அமர்நாத் – 118 (1933)
தீபக் ஷோதன் – 110 (1952)
கிரிபால் சிங் – 100* (1955)
அப்பாஸ் அலி பைக் – 112 (1959)
ஹனுமந்த் சிங் – 105 (1964)
குண்டப்பா விஸ்வநாத் – 137 (1969)
சுரிந்தர் அமர்நாத் – 124 (1976)
முகமது அசாருதீன் – 110 (1984)
பிரவீன் ஆம்ரே – 103 (1992)
செளரவ் கங்குலி – 131 (1996)
வீரேந்தர் சேவாக் – 105 (2001)
சுரேஷ் ரெய்னா – 120 (2010)
ஷிகர் தவன் – 187 (2013)
ரோஹித் சர்மா – 177 (2013)
பிருத்வி ஷா - 134 (2018)

அறிமுக டெஸ்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர்கள்

85பந்துகள் - ஷிகர் தவன் 
93 பந்துகள் - டுவைன் ஸ்மித் 
99 பந்துகள் - பிருத்வி ஷா 

பிருத்வி ஷா: (18 வருடம், 329 நாள்கள்; 99 பந்துகளில் சதம்)

- தொடக்க வீரராகச் சதமடித்த 2-வது இளம் வீரர்  
- டெஸ்ட் சதமடித்த 2-வது இளம் இந்திய வீரர் 
- முதல் டெஸ்டில் சதமடித்த 3-வது இளம் வீரர் 
- அறிமுக டெஸ்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த 3-வது வீரர்

* அறிமுகமான முதல் தர கிரிக்கெட்டிலும் அறிமுகமான டெஸ்ட் போட்டியிலும் சதமடித்த வீரர்கள் 

குண்டப்பா விஸ்வநாத் 
டிர்க் வெல்ஹம் 
பிருத்வி ஷா 

(அறிமுக டெஸ்ட் போட்டியில் சேவாக் சதமடித்தார். ஆனால் தன்னுடைய 2-வது முதல் தரப் போட்டியில்தான் சதமடித்தார். எனினும் அதுவே அவருடைய பேட்டிங் செய்த முதல் இன்னிங்ஸ்!) 

முதல் சதமடித்த இளம் இந்திய வீரர்கள்

17 வருடம் 112 நாள்கள் - சச்சின் டெண்டுல்கர் vs இங்கிலாந்து (1990)
18 வருடம் 329 நாள்கள் - பிருத்வி ஷா vs மே.இ. (2018)
20 வருடம் 021 நாள்கள் - கபில் தேவ் vs மே.இ. (1979)
20 வருடம் 131 நாள்கள் - அபாஸ் அலி பைக் vs இங்கிலாந்து (1959)

குறைந்த பந்துகளில் முதல் சதமடித்த இந்திய வீரர்கள்

85 பந்துகள் - ஷிகர் தவன் 
86 பந்துகள் - பாண்டியா 
93 பந்துகள் - தோனி 
97 பந்துகள் - ஸ்ரீகாந்த் 
99 பந்துகள் - பிருத்வி ஷா 

* முதல் ரஞ்சிப் போட்டியிலும் முதல் டெஸ்டிலும் சதமடித்த வீரர்கள்

குண்டப்பா விஸ்வநாத், பிருத்வி ஷா

முதல் ரஞ்சிப் போட்டி, முதல் துலீப் போட்டி, முதல் டெஸ்ட் என மூன்றிலும் சதமடித்த வீரர்

பிருத்வி ஷா

* பிருத்வி ஷாவுக்கு முன்பு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் - இஷாந்த் சர்மா. 18 வருடம் 265 நாள்களில் டெஸ்ட் போட்டியில் அவர் அறிமுகமானார்.

* டெஸ்ட் போட்டியில் குறைந்த வயதில் அறிமுகமான இளம் இந்திய வீரர் - சச்சின் டெண்டுல்கர். 16 வருடம் 205 நாள்கள். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 13-வது இளம் வீரர் - பிருத்வி ஷா. 

* டெஸ்ட் அறிமுகத்துக்கு முன்பு 14 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார் பிருத்வி ஷா. 26 இன்னிங்ஸில் 7 சதங்கள் அடித்துள்ளார். ராஜ்கோட்டில் தான் முதல் தரப் போட்டிக்கு அறிமுகமானார். அதே மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com