சிறப்பு அனுமதிச் சீட்டு சர்ச்சை: இடம் மாறியது 2-ஆவது ஆட்டம்

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், சிறப்பு அனுமதிச் சீட்டு சர்ச்சை காரணமாக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், சிறப்பு அனுமதிச் சீட்டு சர்ச்சை காரணமாக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தூரில் ஹோல்கார் மைதானத்தில் 24-ஆம் தேதி இந்த ஆட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அந்த ஆட்டத்துக்கான சிறப்பு அனுமதிச் சீட்டுகளை (காம்ப்ளிமன்ட்ரி பாஸ்) விநியோகிக்கும் விவகாரத்தில் பிசிசிஐ-க்கும், மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டது. 
இதையடுத்து அந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் அதே தேதியில் நடைபெறும் என்று பிசிசிஐ புதன்கிழமை அறிவித்துள்ளது. பிசிசிஐ புதிய விதிகளின்படி, ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் இருக்கும் மொத்த இருக்கைகளில் 90 சதவீத இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். எஞ்சிய 10 சதவீத இருக்கைகள் மாநில கிரிக்கெட் சங்கத்துக்கான சிறப்பு அனுமதி டிக்கெட்டுகளாக இருக்கும்.அந்த வகையில், 27,000 இருக்கைகள் கொண்ட இந்தூர் மைதானத்துக்கான சிறப்பு அனுமதி டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 2,700 ஆக இருந்தது. இந்நிலையில் பிசிசிஐ தனது விளம்பரதாரர்களுக்காக அதில் ஒரு பங்கு கோரியதை அடுத்து மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்துக்கும் அதற்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டு, ஆட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com