ஷாங்காய் மாஸ்டர்ஸ்: 4-ஆவது சுற்றில் ஃபெடரர்

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 4-ஆவது சுற்றுக்கு
டேனில் மெத்வதேவுக்கு பந்தை திருப்பும் ஃபெடரர்.
டேனில் மெத்வதேவுக்கு பந்தை திருப்பும் ஃபெடரர்.


சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக அவர் தனது 3-ஆவது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவை 6-4, 4-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினார். இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபெடரர், ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஸ்டா அகுட்டை எதிர்கொள்கிறார்.
முன்னதாக பெளதிஸ்டா 3-6, 6-4, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்டை வென்றிருந்தார். இதேபோல் ஜெர்மனியின் அலெக்ஸாண்ட் ஸ்வெரேவ் 7-5, 6-4 என்ற செட்களில் ஜியார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்தினார்.
ஆர்ஜெண்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல்போட்ரோ 7-5, 7-6(9/7) என்ற செட்களில் பிரான்ஸின் ரிச்சர்டு காஸ்கட்டை வென்றார். தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-3, 6-2 என்ற செட்களில் கஜகஸ்தானின் மிகைல் குகுஷ்கிணை சாய்த்தார்.
இந்திய ஜோடி தோல்வி: ஷாங்காய் மாஸ்டர்ஸின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண்-நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடக் ஜோடி 3-ஆவது சுற்றிலும், இந்தியாவின் ரோஹண் போபண்ணா-பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வாùஸலின் ஜோடி 2-ஆவது சுற்றிலும் தோற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com