சரிவில் இருந்து மீட்ட சேஸ், ஹோல்டர்: முதல்நாள் முடிவில் மே.இ.தீவுகள் 295/7

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அந்த அணியின் டாப் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் பெரிதளவு சோபிக்காமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து ரன் குவிக்கத் தவறினர். இதனால், அந்த அணி 113 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது, ரோஸ்டன் சேஸ் உடன் ,ஷேன் டௌரிச் ஜோடி சேர்ந்தார். இதில், டௌரிச் நிதானம் காட்ட சேஸ் ரன் குவித்து வந்தார். இருப்பினும், இந்த பாட்னரர்ஷிப் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த அணி 182 ரன்கள் எடுத்திருந்தபோது டௌரிச் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதைத்தொடர்ந்து, சேஸ் உடன் கேப்டன் ஹோல்டர் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி அந்த அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய சேஸ் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்து கேப்டன் என்ற முறையில் சிறப்பாக விளையாடிய ஹோல்டரும் அரைசதம் அடித்தார். 

இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹோல்டர் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, முதல்நாள் ஆட்டநேர முடிவு வரை சேஸ் மற்றும் பிஷூ விக்கெட்டுகளை பாதுகாத்து விளையாடினர். 

முதல்நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 

இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com