ஆசிய பாரா போட்டிகள்: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியா மேலும் 3 தங்கம்வென்றது.

ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியா மேலும் 3 தங்கம்வென்றது.
 மகளிர் பி1 செஸ் போட்டியில் கே.ஜெனித்தா ஆன்டோ 1-0 என இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் மனுருங்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.
 அதே நேரத்தில் ஆடவர் வி1 ரேபிட் செஸ் போட்டியில் கிஷன் கங்கோலி சிறப்பாக ஆடி மஜித் பாகேரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.
 பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பாருல் பார்மர் 21-9, 21-5 என்ற ஆட்டக்கணக்கில் தாய்லாந்தின் வான்டி கம்டமை வீழ்த்தி தங்கம் வென்றார்.
 நீச்சலில் ஆடவர் 100 மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்வப்நீல் பட்டீல் வெள்ளி வென்றார். ஏற்கெனவே 400 மீ. ப்ரீஸ்டைலில் வெண்கலம் வென்றிருந்தார் ஸ்வப்நீல். ஆடவர் சி4 தனிநபர் சைக்கிள் 4000 மீ பிரிவில் குர்லால் சிங் வெண்கலம் வென்றார்.
 ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய பாரா போட்டிகளில் வெள்ளிக்கிழமை மேலும் 2 தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா.
 தடகளம் ஆடவர் ஈட்டி எறிதலில் எப் 55 பிரிவில் நீரஜ் யாதவ் 29.24 மீ தூரம் எறிந்து தங்கத்தையும், அமித் பால்யான் வெள்ளியும் வென்றனர்.
 ஆடவர் எப் 51 பிரிவு கிளப் த்ரோ பிரிவில் அமித்குமார் தங்கமும், தரம்பீர் வெள்ளியும் வென்றனர்.
 இதன் மூலம் இந்தியா தற்போது 13 தங்கம், 20 வெள்ளி, 30 வெண்கலத்துடன் மொத்தம் 63 பதக்கங்களை வென்றுள்ளது.
 ரியோ பாராலிம்பிக் வெள்ளி வென்ற வீராங்கனை தீபா மாலிக் எப்51 மகளிர் வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார். எப் 11 பிரிவில் நிதி மிஸ்ராவும் வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com