நேஷன்ஸ் லீக்: போலந்தை புரட்டியது போர்ச்சுகல்

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வீழ்த்தியது.
நேஷன்ஸ் லீக்: போலந்தை புரட்டியது போர்ச்சுகல்

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வீழ்த்தியது.
 குரூப் 3 பிரிவில் போலந்தும்-போர்ச்சுகலும் மோதின. இது போலந்து அணியின் கேப்டன் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கியின் 100-ஆவது ஆட்டம் ஆகும். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. போர்ச்சுகல் அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தால் 3-0 என போலந்து தோல்வியுற்றது. ஏற்கெனவே இத்தாலியை 1-0 என போர்ச்சுகல் வென்றுள்ளது.
 பொட்கோர்ஸியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் செர்பியா 2-0 என மான்டெநீக்ரோ அணியை வென்றது. இஸ்ரேல் 2-1 என ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. தொடர்ந்து 7 வெற்றிகளை குவித்த ஸ்காட்லாந்து முதல் தோல்வியை சந்தித்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் கொசோவோ 3-1 என மால்டாவை வென்றது.
 தோல்வியில் இருந்து தப்பிய பிரான்ஸ்: இதற்கிடையே குயின்காம்பில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐஸ்லாந்திடம் தோல்வியில் இருந்து தப்பியது உலக சாம்பியன் பிரான்ஸ். ஐஸ்லாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில் கடைசி 30 நிமிடங்களில் பதிலி வீரராக களமிறங்கிய கிளியான் மாப்பே அடித்த 2 கோல்களால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
 ஆர்ஜென்டீனா வெற்றி
 சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஆர்ஜென்டீனா-இராக் அணிகள் இடையே நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் 4-0 என ஆர்ஜென்டீனா அபார வெற்றி பெற்றது.
 அதன் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இல்லாத நிலையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் செவ்வாய்க்கிழமை வைரியான பிரேஸிலுடன் மோதுகிறது ஆர்ஜென்டீனா.
 மியாமியில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் கொலம்பிய அணி 4-2 என அமெரிக்க அணியை வீழ்த்தியது. கார்டிஃப் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின் 4-1 என்ற கோல்கணக்கில் வேல்ûஸ பந்தாடியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com