யூத் ஒலிம்பிக்: பாட்மிண்டன் இறுதியில் லக்ஷயா சென்

யூத் ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக பாட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர் லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளார்.
யூத் ஒலிம்பிக்: பாட்மிண்டன் இறுதியில் லக்ஷயா சென்

யூத் ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக பாட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர் லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளார்.
 ஆசிய ஜூனியர் நடப்பு சாம்பியனான லக்ஷயா சென் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கொடை நரோகோவை 14-21, 21-15, 24-22 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். இறுதி ஆட்டத்தில் அவர் சீனாவின்
 லீ ஷெபிங்கை எதிர்கொள்கிறார். இதில் வென்றால் யூத் ஒலிம்பிக் பாட்மிண்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார் சென். கடந்த 2010-இல் முதல் யூத் ஒலிம்பிக்கில் பிரணாய் ராய் வெள்ளி வென்றிருந்தார்.
 காலிறுதியில் மகளிர் ஹாக்கி அணி
 மகளிர் ஹாக்கி 5 பிரிவில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. குரூப் ஏ பிரிவில் ஆர்ஜென்டீனாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தை இந்தியா பெற்றுள்ளது. 5 ஆட்டங்களில் இது இந்தியா பெறும் 4-ஆவது வெற்றியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com