ஆசிய பாரா போட்டிகள்: 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றது இந்தியா

ஜகார்த்தா ஆசிய பாரா போட்டிகளில் 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களுடன் இந்தியா 9-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஆசிய பாரா போட்டிகள்: 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றது இந்தியா

ஜகார்த்தா ஆசிய பாரா போட்டிகளில் 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களுடன் இந்தியா 9-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
 இறுதி நாளான சனிக்கிழமை மேலும் 2 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர்.
 ஆடவர் பாட்மிண்டன் எஸ்எல் 3 பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீரர் பிரமோத் பகத் 21-19, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று தங்கம் வென்றார். இரு கால்களிலும் பாதிப்பு உள்ளோருக்கான பிரிவாகும் இது.
 ஆடவர் எஸ்எல் 4 பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீரர் தருண் 21-16, 21-6 என்ற கேம் கணக்கில் சீனாவின் யுவாங் கவோவை வென்று தங்கம் வென்றார். சனிக்கிழமையுடன் ஆசிய பாரா போட்டிகள் நிறைவடைந்தன. இதில் 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 72 பதக்கங்களுடன் 9-ஆவது இடத்தைப் பெற்றது. சீனா, தென்கொரியா, ஈரான் உள்ளிட்டவை முறையே முதல் மூன்றிடங்களைப் பெற்றன.
 கடந்த 2014 ஆசிய பாரா போட்டியில் இந்தியா 3 தங்கம், 14 வெள்ளி, 1 வெண்கலத்துடன் வெறும் 33 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com