யூத் ஒலிம்பிக்: ஹாக்கியில் முதன்முறையாக இந்தியாவுக்கு வெள்ளி

யூத் ஒலிம்பிக் போட்டி ஹாக்கி 5 ஆட்டத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வெள்ளிப் பதக்கங்களோடு திருப்தி பட வேண்டியதாகியது.
யூத் ஒலிம்பிக்: ஹாக்கியில் முதன்முறையாக இந்தியாவுக்கு வெள்ளி

யூத் ஒலிம்பிக் போட்டி ஹாக்கி 5 ஆட்டத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வெள்ளிப் பதக்கங்களோடு திருப்தி பட வேண்டியதாகியது.
 இரு அணிகளும் இறுதிச் சுற்றில் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடவர் அணி மலேசியாவோடு மோதியது. இந்திய வீரர் விவேக் சாகர் பிரசாத் முதல் கோலை அடித்த நிலையில், மலேசிய வீரர் ப்ராடஸ் பதில் கோலடித்தார். மீண்டும் அடுத்த கோலை பிரசாத் அடித்ததால் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது.
 ஆனால் இரண்டாவது பாதியில் மலேசிய வீரர்கள் அகிமுல்லா, அமிருல் அஸார் ஆகியோர் கோலடித்து 4-2 என்ற கணக்கில் தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் யூத் ஒலிம்பிக் ஹாக்கியில் முதல் தங்கத்தை மலேசியா வென்றது.
 மகளிர் ஹாக்கி:
 மகளிர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்-ஆர்ஜென்டீனாவும் மோதின. முதலில் இந்திய வீராங்கனை மும்தாஸ் கான் அடித்த கோலால் முன்னிலை பெற்றது. பின்னர் ஆர்ஜென்டீனா வீராங்கனை ஜியாநெல்லா பதில் கோலடித்தார். பின்னர் சோபியா ரமல்லோ இரண்டாவது கோலை அடித்தார். இரண்டாம் பாதியில் பிரிஸா பிரக்கஸர் கோலடித்ததின் மூலம் 3-1 என வென்று ஆர்ஜென்டீனா முதல் தங்கத்தை வென்றது.
 இந்தியா இரு பிரிவுகளிலும் முதன்முதலாக வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆர்ஜென்டீனா ஆடவர், சீன மகளிர் அணிகள் வெண்கலம் வென்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com