பாரா விளையாட்டு வீரர்கள் உண்மையான அடையாளமாக திகழ்கின்றனர்

பாரா விளையாட்டு வீரர்கள் உண்மையான அடையாளமாக திகழ்கின்றனர் என மத்திய விளையாட்டு அமைச்சர்
ஆசிய பாரா போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசுகிறார் பிரதமர் மோடி.
ஆசிய பாரா போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசுகிறார் பிரதமர் மோடி.


பாரா விளையாட்டு வீரர்கள் உண்மையான அடையாளமாக திகழ்கின்றனர் என மத்திய விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். விழாவில் பங்கேற்ற அமைச்சர் ரத்தோர் பேசியதாவது:
நாட்டின் உண்மையான அடையாளமாக பாரா விளையாட்டு வீரர்கள் உள்ளனர். பதக்கம் வென்று அனைவரும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். உங்களின் இந்த வெற்றி, பல்வேறு சிக்கல் நிறைந்த பயணத்தை கடந்து வந்து பெறப்பட்டதாகும். விளையாட்டை எவரும் விட்டு விடக்கூடாது. உங்களது சுய நிர்ணயத்தை கைவிடக்கூடாது. பாரா வீரர்களுக்கு அரசின் முழு ஆதரவு உண்டு என்றார் ரத்தோர்.
விளையாட்டுத் துறை செயலாளர் ராகுல் பட்நாகர், ஸ்போர்ட்ஸ் இந்தியா இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் பங்கேற்றனர்.
தங்கம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு 20 லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 
ஜகார்த்தா ஆசிய பாரா போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலத்துடன் மொத்தம் 72 பதக்கங்களை வென்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com